







அடாமிக் குயிஸ் என்பது ஒரு சர்வதேச, ஒரு-நாள் நிகழ்ச்சி ஆகும். இது ரஷ்ய நியூக்ளியர் துறையின் 75வது ஆண்டு தினம் மற்றும் உலக அறிவியல் தினம் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது. நமது அன்றாட வாழ்வை மேம்படுத்தவும், இந்த பல்லுயிர் உலகில் நாம் தனித்துவமாக வாழவும் நியூக்ளியர் சயின்ஸ் எப்படி பயன்படுகிறது என்பது பற்றி எடுத்துரைக்க விரும்புகிறோம்.
குளோபல் அடாமிக் குயிஸ் என்பது உங்களின் அறிவை மட்டும் பரிசோதிக்காது, நியூக்ளியர் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சிகள் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. கேள்விகள் வேண்டுமானால் சற்று சிரமமாக இருக்கலாம்.
இந்த சாகசத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், முக்கிய கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என பலரையும் நாங்கள் வரவேற்றுள்ளோம். இந்த குயிஸ் இறுதியில், ஒரு நிபுணர் அனைத்து கேள்விகளையும் எடுத்துரைத்து, அதற்குரிய பதில் பற்றி விரிவாக விளக்கிப் பேசுவார்!
நவம்பர் 14-15, 2020 அன்று ஒன்றரை மணி நேரம் இதற்கென ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். உலக அறிவியல் தினத்தன்று இந்த குயிஸ் 48 மணிநேரம் பார்வைக்கு இருக்கும். குயிஸ் தொடங்க “Join” லிங்க் மீது கிளிக் செய்யுங்கள்.
சயின்ஸ், நியூக்ளியர் மற்றும் வாழ்வியல் பற்றி கேட்கப்படும் 25 கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டும். பதில் தெரியாதது பெரிய தவறில்லை, தெரிந்துகொள்ளும் மனநிலை இருந்தால் போதும்.
டெஸ்ட் முடித்ததும், எங்களின் நிபுணர் பேசும் வீடியோவை பார்த்து, புதிய விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களின் சான்றிதழை பெறுங்கள், ஒருவேளை நீங்கள் விரும்பினால், சமூக ஊடகம் வழியே உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள் அல்லது உங்களது டிவைஸில் சேமித்திடுங்கள்.